Home முக்கியச் செய்திகள் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் அதிரடியாக கைது

இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் அதிரடியாக கைது

0

இலங்கை (Sri Lanka) நடிகை பியூமி ஹன்சமாலியின் (Piumi Hansamali) மகன் வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜகிரிய, கலபலுவாவ பகுதியில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று (13.07.2025) காலை கைது செய்யப்பட்டதாக வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

காவல்துறை விசாரணைகளின்படி, பாதிக்கப்பட்ட நபர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெலிக்கடை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version