மன்னார் காற்றலை விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 14 காற்றலைகளை நிறுவ வேண்டும். அதனைத் தாண்டி எதனையும் தாம் செய்ய மாட்டோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து வடக்கு மாகாண தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டும்.
மக்கள் சனத்தொகை அதிகம் உள்ள இடத்திலே காற்றலைகளை போடுவதால் மக்களுடைய அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும்.
மேலும், 14 காற்றலைகளை தவிர அதற்கு மேலாக எந்தக் காற்றலைகளையும் நிறுவக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
