Home ஏனையவை ஆன்மீகம் மன்னார் – மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழா

மன்னார் – மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழா

0

Courtesy: Harrish

மன்னார்(Mannar) – மருதமடு அன்னைக்கு முடி சூட்டிய நூற்றாண்டு விழாவும் ஆடித் திருவிழா
திருப்பலியும் கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில், கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர்
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் குருநாகல் மறைமாவட்ட ஆயர்
கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேரா ஆகியோர் இணைந்து கூட்டுத் திருப்பலி இன்று(02) காலை 6.15 மணி அளவில்
ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்தை தொடர்ந்து நவநாள் ஆராதனை
திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திங்கட்கிழமை (01) மாலை வேஸ்பர்ஸ் ஆராதனை
இடம்பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, மடு அன்னைக்கு முடி சூட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் கொழும்பு உயர்
மறைமாவட்ட ஆயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இணைந்து முடிசூட்டி
வைத்துள்ளனர்.

திருச்சொரூப பவனி

கடந்த வருடம் மன்னார் மறைமாவட்ட ஆயரினால் நூற்றாண்டு விழவை
முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இன்றைய தினம் (2) செவ்வாய்க்கிழமை இறக்கி
வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மடு அன்னையின் திருச்சொரூப பவனி மற்றும் மடு அன்னையின்
ஆசீர்வாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருவிழா திருப்பலியில் அருட் தந்தையர்கள், அருட் சகோதரர்கள், வடமாகண
ஆளுனர், அரசியல் பிரமுகர்கள் திணைக்கள தலைவர்கள் உள்ளடங்கலாக சுமார் 7
இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version