Home இலங்கை சமூகம் மன்னார் கட்டுக்கரை குளத்தின் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான முன்னோடிக் கூட்டம்!

மன்னார் கட்டுக்கரை குளத்தின் பெரும்போக பயிர்ச்செய்கை தொடர்பான முன்னோடிக் கூட்டம்!

0

Courtesy: Nayan

மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழான 2025 தொடக்கம் 2026 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச்செய்கை முன்னோடிக் கூட்டம் இன்று (22.10.2025) இடம்பெற்றது.

அதன்படி, குறித்த கூட்டம் இன்று (22.10.2025) காலை மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது.

இதன்போது விவசாய அமைச்சு ஊடாக 4 சதவீத வட்டி உடனான கடன் தொடர்பான விழிப்புணர்வு மாவட்ட விவசாய பணிப்பாளரினால் எடுத்துரைக்கப்பட்டது .

விவசாய கடன்

விவசாய கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விளக்கங்கள் வங்கிகள் அலுவலர்கள் மூலம் சாதகமான முறையில் வழங்கப்பட்டது.

நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் போதுமான அளவு நீர் கிடைக்க பெற்று வருகிறது என்பதை உறுதி செய்ததுடன் சாதகமான நிலை உள்ளத்தையும் உறுதிப்படுத்தினர்.

விவசாய கடன் திட்டங்கள் தொடர்பான முதற் கட்டமாக நான்கு விவசாயிகளுக்கு மக்கள் வங்கியின் மன்னார் கிளை ஊடாக காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

கமநல காப்புறுதி சபையின் காப்புறுதி நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் உதவி பணிப்பாளர் ஊடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version