Home இலங்கை சமூகம் மன்னார் துறைமுக நிர்மாணப் பணி : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மன்னார் துறைமுக நிர்மாணப் பணி : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

மன்னார் (Mannar) துறைமுக நிர்மாணப் பணிகளுக்கான விலைமனு கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், மன்னார் துறைமுகத்தில் 300 மீட்டர் நீளமான முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் K.D.S. ருவன்சந்திர (Ruvanchandra) குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இதற்காக உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பல் சேவை

அத்தோடு, முனையத்தின் நிர்மாணப் பணிகளின் பின்னர் இந்தியா (India) மற்றும் இலங்கைக்கு (Sri Lanka) இடையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான வசதிகள் இலகுவாக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மன்னார் துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக அறிவித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version