Home இலங்கை சமூகம் மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

மன்னாரில் இளந்தாய் சிந்துஜாவின் மரணம்: கணவரும் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்ப்பு

0

மன்னார் வைத்தியசாலையில் (Mannar Hospital) அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் மரியராஜ் (26 வயது) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (24.8.2024) இரவு வவுனியா (Vavuniya) – பனிக்கர், புளியங்குளத்தில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் இளம் தாய் ஒருவர் குழந்தை பெற்ற நிலையில்
சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற
போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக
தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா – பனிக்கர் புளியங்குளத்தில்
வசித்து வந்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த நிலையில்
வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/X7FytW6Glw4

Source: https://ibctamil.com/article/mannar-sindhuja-husband-sudden-death-1724553153

NO COMMENTS

Exit mobile version