பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய
வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று சனிக்கிழமை (30) காலை
இடம்பெற்றது.
இன்று சனிக்கிழமை (30) காலை வசந்த மண்டபத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை
தொடர்ந்து கொடி
தம்பத்திற்கு எழுந்தருளப் பட்டு,கொடி தம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம்
பெற்றது.
தீர்த்த திருவிழா
அதனை தொடர்ந்து உள் வீதி உலா இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்த கரைக்கு பஞ்ச மூர்த்திகள்
எழுந்தருளி அதைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்காக
பாலாவி தீர்த்தத்தில் இருந்து தீர்த்த செம்புகளில் தீர்த்தங்களை எடுத்து
மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
இன்றைய தினம் மாலை கொடி இறக்க நிகழ்வு இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://tamilwin.com/article/mannar-thirukedhiswaram-temple-festival-1780148128
