மன்னாரில் காற்றைலை திட்டத்திற்கான பாதைகளை அமைக்கும் பொழுது கண்டுகொள்ளப்படாத வடிகால் அமைப்பு முறைகளால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக சூழலியலாளர் எடிசன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு,30 காற்றாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் வெள்ளப்பெருக்கு, வெளிநாட்டு பறவைகளின் வரவு குறைவு கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு போன்ற சிக்கல்கல் உருவாகியுள்ளதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறி சிறப்பு நேரலையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்கள் வேண்டாம் என்று போராடிய காற்றலைத் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இந்த காற்றலை திட்டத்தை மக்களின் விருப்பதிற்கு ஏற்ப தாம் செய்வதாக அரசாங்கம் பொய்யான பிரசாரத்தை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
