Home இலங்கை அரசியல் பிரித்தானிய தூதுவரை சந்தித்த மனோ கணேசன் எம்பி

பிரித்தானிய தூதுவரை சந்தித்த மனோ கணேசன் எம்பி

0

இலங்கைக்கான பிரித்தானிய (UK) தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக்கும் (Andrew Patrick)  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும் (Mano Ganesan) இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் சமூக – பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் இங்கிலாந்தின் வகிபாகம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அதிகாரப் பகிர்வு

அத்துடன், மலையக மக்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்கள், குறிப்பாக பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் மற்றும் நிர்வாக கட்டமைப்பில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

நில உரிமைகள், தேசிய நீரோட்டத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவை விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசின் கடமை

மேலும், எமது சமூகத்தின் மீட்சிக்கு பிரித்தானிய அரசின் கடமையை நாங்கள் நல்லெண்ணத்துடன் நினைவூட்டினோம் என்று மனோ கணேசன் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச விவகார மற்றும் தொடர்பாடல் உப தலைவர் பாரத் அருள்சாமியும் கலந்து கொண்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version