இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்
தூதுக் குழு சந்தித்துள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள இந்தியத் உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நேற்றையதினம்(07.02.2025) குறித்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதன்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் எம்.பி., வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி., கட்சியின் சர்வதேச விவகார உப தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மலையக மக்கள் தொடர்பில் வலியுறுத்தல்
இந்தியத் தரப்பில் உயர்ஸ்தானிகருடன், அரசியல் துறை இரண்டாம் செயலாளர் அசோக் குமாரும் கலந்துகொண்டார்.
இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான பொதுவான பொருளாதார, சமூக, கலாசார
ஒத்துழைப்புகளைச் செயற்பாடுகளுக்கு மத்தியில், இலங்கை வாழ் தமிழ் மக்கள்
குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இந்தியாவின் விசேட
கடப்பாட்டை இதன்போது வலியுறுத்தியதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
