Home இலங்கை அரசியல் மனுஷ நாணயக்கார கைது

மனுஷ நாணயக்கார கைது

0

புதிய இணைப்பு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் மனுஷ நாணயக்கார முன்னிலையானார்.

இதனையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

முதலாம் இணைப்பு

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று புதன்கிழமை (15) காலை முன்னிலையாகியுள்ளார்.

முறையற்ற வகையில் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தன்னை கைது செய்ய முன், முன்பிணை மூலம் தன்னை விடுவிக்கக் கோரி மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய கொழும்பு நீதிமன்ற பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டமைகுறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version