Home இலங்கை அரசியல் அநுரவுக்கு தொடரும் சிக்கல் – பொது மன்னிப்பில் மோசடியான முறையில் விடுதலையான பலர்

அநுரவுக்கு தொடரும் சிக்கல் – பொது மன்னிப்பில் மோசடியான முறையில் விடுதலையான பலர்

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் ஆபத்தான கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கடந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடாளவிய ரீதியிலுள்ள சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 நடத்தப்பட்ட விசாரணை

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில சிறைச்சாலைகளின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மோசடி நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மன்னிப்பை பயன்படுத்தி அனுராதபுரத்தை சேர்ந்த திலகரத்ன என்ற சந்தேக நபர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version