Home உலகம் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

0

கனடாவின்  (Canada) 24 ஆவது பிரதமராக மார்க் கார்னி (Mark Carney) பதவியேற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கடந்த ஜனவரி ஏழாம் திகதி பதவி விலகி இருந்தார்

இதைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடா நாட்டின் 24 ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைமைப் பதவி

லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னி வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் கார்னி பதவியேற்றுள்ளார்.

பொருட்களுக்கு வரி

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

இவ்வாறான சூழலில் மார்க் கார்னி பிரதமராக பதவியேற்றுள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version