Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: யாழ் அரசாங்க அரசாங்க அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: யாழ் அரசாங்க அரசாங்க அதிபர்

0

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து
ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி
அதிகாரி மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம்(02.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்து 92, 280 பேர் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் குறை நிரப்பு பட்டியலில் இருந்து 2463 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, 31 ஆம் திகதி ஐந்தாம் மாதம் 2024 ஆம் ஆண்டு 18 வயதினை பூர்த்தி
செய்தவர்கள், வாக்காளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்பு செயற்பாடுகள் இடம்பெற உள்ளன.

அதற்கான வாக்காளர்களுக்கான அட்டைகள் நேற்றைய தினம்(02) தபால் நிலையத்தில்
கையளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எங்களுடைய
மாவட்டத்தில் 1792 பேர், விசேட தேவைக்குரிய வாக்காளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்களது வாக்கினை சுமுகமான முறையில் அளிப்பதற்கான
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

விசேட தேவைக்குட்பட்டவர்களில் அதாவது, நிரந்தர வலிமை இழப்புக்கு உட்பட்டவர்கள்
262 பேருக்கு தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விசேட அடையாள அட்டை கிடைக்க
பெற்று அவை தற்போது வழங்கப்பட்டுள்ளன.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version