யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி ஒருவரை கண்டுக்கொள்ளாத மருதங்கேணி வைத்தியசாலை மீது குறித்த சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி வைத்தியசாலைக்கு அப்பகுதியை சேர்ந்த சிறுமி
ஒருவர் வயிற்று வலி காரணமாக இன்று(23)அவசரமாக பெற்றோரால் அழைத்துச்
செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் அலட்சியம்
வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்றவேளை இன்று ஞாயிறு வைத்தியர்கள்
இல்லை என்றும் தாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதால் அரை மணிநேரம் இருக்கும்
படியும்,தாதியர் ஒருவர் அரை மணி நேரத்தில் வருவார் என்றும் அங்கு சாப்பிட்டுக்
கொண்டிருந்த தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.
வயிற்றுவலியால் துடித்த சிறுமியின் அவசர நிலையை உணராது அசமந்த போக்காக
தாதியர்கள் இருப்பதை அறிந்த பெற்றோர் அருகில் உள்ள பளை வைத்தியசாலைக்கு
சிறுமியை அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதித்த பளை வைத்தியசாலை வைத்தியர் சிறுமிக்கு சிறுநீர்
வெளியேறுவதில் பிரச்சனையாக உள்ளதால் நோயாளர் காவு வண்டி மூலம் அவசரமாக
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
நோயாளிகள் கவலை
அண்மைக்காலமாக மருதங்கேணி வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் வைத்தியர்கள்
உட்பட்ட ஊழியர்கள் மிகவும் தான் தோன்றித்தனமாக ஈடுபட்டுவருவதாக நோயாளிகள் கவலை
தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தனது பிள்ளைக்கு
உயிராபத்து நிகழ்ந்தால் இவர்களே காரணமெனவும் சிறுமியின் தந்தை கண்ணீர் மல்க
தெரிவித்துள்ளார்.
