அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிஸ்கைலுஸ் மைய அகடமி பயிற்சியில் இன்றையதினம்(18) இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஒருவர் காயமடைந்ததோடு அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகள்
வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதோடு காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்தில் தீ விபத்து புலனாய்வாளர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிப்பதற்காக FBI முகவர்களும் களத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
