Home இலங்கை அரசியல் நாட்டில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

நாட்டில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து சஜித் வெளியிட்ட தகவல்

0

நாட்டில் சரியான கொள்முதல் முறை இல்லாத காரணத்தினால் தான் அதிகமான மோசடிகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இன்று (08) கொழும்பு (Colombo) கோட்டை ரஜ மகா விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ”நாட்டின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் முறையாகவும் நியாயமாகவும் இடம்பெறும். சரியான வழிமுறையைக் கையாளும் போது எவருக்கும் திருட முடியாது.

நிதி மோசடி

கொள்முதல் முறை இல்லாத காரணத்தினால் தான் அதிகமான மோசடிகள் இடம்பெறுகின்றன. அதனால் சரியான நடைமுறைகளைக் கையாண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

அவசர நிலைமைகளின் போதும் இடம்பெறுகின்ற கொள்முதல் முறைகளில் இருந்து விலகி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால், கடந்த காலங்களில் பெருந்தொகையான நிதி மோசடி இடம் பெற்றிருக்கின்றது.

VFS போன்ற கொடுக்கல் வாங்கல்களில் மோசடி இடம் பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்ற தீர்ப்பொன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே அரச நிர்வாகத்துக்குள் முறையான கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டும்.

நாட்டின் மிகப் பெரிய பலம்

அரசியலமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயக கட்டமைப்பையும் பாதுகாத்து,
நல்லாட்சியை முன்னெடுக்கின்ற வகையில் பொறுப்புள்ள நிர்வாகக் கட்டமைப்பை
முன்னெடுப்போம். தசராஜ தர்மத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்வோம்.

ஒற்றுமையே நாட்டின் மிகப் பெரிய பலமாகும். எனவே இன, மத, குல, வகுப்பு, கட்சி
பேதங்களின்றி ஒற்றுமையோடு முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்போம். என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version