உமா ஓயா திட்டத்தை மக்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தினால் வருடத்திற்கு 900 கோடி ரூபா இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
சில அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினாலேயே நாட்டுக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த தாக்கங்களின் காரணமாக, நாட்டுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!
நட்டம் ஏற்படும்
இந்நிலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையம் முக்கிய பங்கினை வகித்து வருவதாகவும் அதனை வழங்குவதிலும் நாட்டில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், சம்பூர் மின் உற்பத்தி நிலையம் வழங்கப்படாவிட்டால் இலங்கைக்கு வருடாந்தம் 3,200 கோடி ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி! கோலாகலமாக இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |