அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நவம்பர் 21
ஆம் திகதி நடத்தவுள்ள, பேரணியில் முக்கிய எதிர்க்கட்சி ஒன்று
பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
முன்னதாக இந்த பேரணியில் பங்கேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்
சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
விமலின் முடிவு
இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர
முன்னணி இந்த பேரணியில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, விமல்
வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
