யாழில் (Jaffna) மழையை சாதகமாகப் பயன்படுத்தி திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது யாழ் அச்சுவேலி பகுதியில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அச்சுவேலி, இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.
காவல் நிலையத்தில் முறைப்பாடு
வீட்டில் புகுந்த திருடர்கள், மழையை சாதகமாகப் பயன்படுத்தி சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் எட்டு இலட்சம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தடயவியல் காவல்துறை
மோப்ப நாய் மற்றும் தடயவியல் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்களை அச்சுவேலி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.