இந்த வருடம் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய மட்டத்தில் 8 மாணவர்கள் தெரிவாகி சர்வதேச கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டிக்கான மாணவர் குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அதிக எண்ணிக்கையான மாணவர்கள் ஒரே பாடசாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவே என தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து
ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டி
வலயமட்ட போட்டியில் 60 மாணவர்கள் பங்கு பற்றி மாவட்ட மட்ட போட்டிக்காக அந்த 60 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மாகாணமட்ட போட்டிக்காக 24 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து 16 மாணவர்கள் தேசிய மட்ட போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தேசிய மட்ட போட்டியில் 8 மாணவர்கள் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சர்வதேச ரீதியில் நடைபெறும் கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டிக் குழாமில் இடம்பிடித்துள்ளனர்.
மணலாற்றில் கண்டெடுக்கப்பட்ட ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பேசும் நாணயங்கள்
சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |