யாழ்ப்பாணம் (Jaffna) மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைத்துள்ளது.
யாழ். நல்லூரில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் இன்று(9) பிற்பகல் நடைபெற்ற கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் பதவி
அதேவேளை, யாழ். மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை யாழ். மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
