கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவத்தின் பின்னர் இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்துகம பிரியங்கா கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர் கொஸ்கெடிய சின்னத்தில் சுயேச்சைக் குழுவில் இருந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
முகநூல் மூலம் பிரச்சாரம்
இஷாரா செவ்வந்திக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல ஆதரவளித்த மத்துகம ஷான் என்ற ஷான் அரோஷ் ஜயசிங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் பிரியங்கா என்ற பெண்ணுக்காக தனது முகநூல் மூலம் பிரச்சாரம் செய்துள்ளார்.
52 வயதுடைய சந்தேகநபரின் மகனும் மத்துகம சுத்தா எனப்படும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும் அவர் தற்போது டுபாய் நாட்டிற்குத் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.