Home இலங்கை அரசியல் மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

0

புதிய இணைப்பு

மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும், அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாகவும்  வைத்தியர் சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் இணைப்பு

மாவை சேனாதிராஜாவின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் நினைவு அற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (28.01.2024) அதிகாலை வீட்டில் விழுந்த நிலையிலேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர்,14இல் வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திற்கு பின்னர் மனச்சோர்வுடன் காணப்பட்டதாகவும், படிப்படியாக தடுமாற்ற கதைகள் கதைத்து வந்துள்ளதோடு, இன்று கீழே விழுந்த நிலையில் சுயநினைவற்றுள்ளதாகவும் அவரின் மகன் கலையமுதன் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா  யாழ். போதனா வைத்தியசாலையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவசர சிகிச்சை 

யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட  மாவை சேனாதிராஜாவிற்கு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
இதன் காரணமாக தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version