Home இலங்கை அரசியல் மாவையின் மரணம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட முக்கியஸ்தர்

மாவையின் மரணம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட முக்கியஸ்தர்

0

மாவைசேனாதிராஜாவின் மரணம் தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மாவைசேனாதிராஜாவின் இழப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்கும் கருத்து தெரிவித்த அவர்,

எல்லோரையும் ஒற்றுமைப்படுத்தி கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர் மாவை .

அவர், இறப்பதற்கு முன்னர் இரத்த கசிவு ஏற்பட்டுள்ள நிலையிலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர், சில நபர்களுடன் தர்க்கத்தில் ஈடுப்பட்டதாகவும் அதனால் மனம் புண்பட்டதாகவும் அதன் பின்னரே இரத்த கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியிலுள்ள சிலர் கட்சியை  பிரித்தாழுவதற்கு எண்ணியுள்ளனர்.

இதனாலே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி பாரிய தோல்வியை சந்தித்தது” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version