மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி (Galle) மற்றும் மாத்தறை (Matara) மாவட்டங்களிலும் இன்று (21) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலையே எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை (Trincomalee), மொனராகலை (Monaragala) மற்றும் ஹம்பாந்தோட்டை (Hambantota) மாவட்டங்களிலும் மணிக்கு 50-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் காற்றின் வேகமானது, அவ்வப்போது, மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.