Home இலங்கை அரசியல் பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த

பொது மேடையில் சஜித் மற்றும் அனுரவை சாடிய மகிந்த

0

Courtesy: Sivaa Mayuri

காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் நாட்டை வழிநடத்த அழைப்பு விடுக்கப்பட்ட போது சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரும் எதிர்காலத்தை கருதி அதனை ஏற்க மறுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) குற்றம் சுமத்தியுள்ளார். 

கொழும்பில் நேற்று (01.05.2024) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னர் நாட்டை வழிநடத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது சஜித் (Sajith) மற்றும் அனுர (Anura) ஆகியோர் அரசியலில் எதிர்காலத்தை கருதி அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். 

ரணிலின் மே தின உரை : வெளியான சுவாரஸ்யமான தகவல்

மக்களின் ஆதரவு 

எனினும், அவர்கள் பின்வாங்கியபோது ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் நாட்டை வழிநடத்த முன்வந்தமை பாராட்டத்தக்கது. 

பொதுஜன பெரமுன பல்வேறு அரசியல் பிரிவினரின் இலக்காகி தேவையற்ற சேறுபூசல்களுக்கு முகங்கொடுத்து வருவதால், இந்த மே தினக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. 

மேலும் அக்கட்சி, மக்களின் ஆதரவைத் தக்க வைத்துள்ளது என்பதை ஒவ்வொரு அரசியல் தலைவரும் புரிந்துகொள்கிறார்கள்.

என்னை கொலை செய்ய சதி திட்டம்: ரொசான் ரணசிங்க

ஜனாதிபதித் தேர்தல்

அவர்கள் பொதுஜன பெரமுனவின் 6.9 மில்லியன் மக்கள் கூட்டத்தை தங்களுக்குள் பிரித்துக் கொள்ள முயல்கிறார்கள். 

எனவே, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும்.

தமது கட்சியினால் அங்கீகரிக்கப்பட்டவர் மாத்திரமே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என நம்பிக்கையை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version