Home இலங்கை சமூகம் வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேதின ஊர்வலம்

வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மேதின ஊர்வலம்

0

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பிரதான மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும்
வவுனியாவில் நேற்று(01)உணர்வு எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்பாக ஆரம்பமான மேதின ஊர்வலம்
அங்கிருந்து குருமன்காடு, கலைமகள் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்ததுடன்,
அங்கு மேதின கூட்டம் இடம்பெற்றது.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர் : பலருக்கும் ஆபத்து

இனப்படுகொலை

குறித்த கூட்டமானது முன்னனயின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பாெதுச்
செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்
சுரேஸ், கட்சியின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ், மற்றும் கட்சி
தொண்டர்கள், ஆதரவாளர்கள் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும், இனப்படுகொலைக்கு
சர்வதேச நீதிவேண்டும், வெடுக்குநாறி எங்கள் சொத்து, அரசியல் கைதிகளை விடுதலை
செய்’ போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்

யாழில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version