தேர்தலை எதிர்நோக்க தயராகிவரும் இலங்கையர்கள், ஏமாற்று பேரணிகளுக்கு ஏமாறாமல் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் சொந்த காலில் நிற்கச் செய்யும் பொறுப்புக்கூறக் கூடிய அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பினை நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்கள் பாரிய அவலத்துக்கு மத்தியிலேயே, இந்த ஆண்டும் மே தினத்தை கொண்டாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம்: நீண்ட இழுபறியின் பின் தீர்வு
தொழிலாளர் வர்க்கம்
நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் நிலையில், தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுக்கு சற்றும் பொருந்தாத சம்பளத்தால் வேலை செய்யும் தொழிலாளர் வர்க்கம் மிகவும் அவலம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன, மத, சாதி வேறுபாடின்றி நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமெனவும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ஒரு நாளில் மட்டும் அல்லாது வருடம் முழுவதும் பாதுகாக்க ஒன்றுபட வேண்டுமெனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க
இதேவேளை, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் உள்ளிட்ட பொது மக்களுடன் தேசிய மக்கள் சக்தியும் தோழமையுடன் கைகோர்த்துக் கொள்வதாக அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரலாற்றின் மிகப்பெரிய நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களின் மத்தியில் உலகிலுள்ள அனைவரும் இந்த ஆண்டு மே தினத்தை கொண்டாட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் 21 ஆவது நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும், உலக சனத்தொகையில் பெரும்பான்மையினர் வறியவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அதிபர் தேர்தல்
இந்த பயங்கரமான நெருக்கடிக்குள் உழைக்கின்ற ஒட்டுமொத்த மக்களும், இளைஞர்களும், பிள்ளைகளும், பெண்களும், கலைஞர்களும், தொழில்வாண்மையாளர்களும், சிறிய அளவிலான கைத்தொழிலதிபர்களும், தொழில் முயற்சியாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதிகாரத்தைக் கைமாற்றக்கூடிய அதிபர் தேர்தலொன்றுக்கு அருகில் இருந்து கொண்டு இந்த ஆண்டு இலங்கையர்கள் மே தினத்தைக் கொண்டாடுவதாக அனுரகுமார நினைவூட்டியுள்ளார்.
இந்த வருடம் வெறுமனே தேர்தல் வருடம் மாத்திரமன்றி எமது நாட்டின் பெரும்பான்மையான மக்கள் திடசங்கற்பத்துடன் கூட்டாக, வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற வருடமாகவும் மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |