Home இலங்கை அரசியல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வந்த சஜித்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வந்த சஜித்

0

Courtesy: Sivaa Mayuri

இந்தியா மற்றும் சீனா என்ற இரண்டு ஆசிய சக்திகளுக்கு இடையில் மத்தியஸ்தம் வகிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்வந்ததாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சீனாவின் தூதுக்குழுவினருக்கும் அவரது கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது பிரேமதாச இவ்வாறான ஒரு வாய்ப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தனது வெளிநாட்டு உறவுகளில் எந்தவொரு நாட்டிற்கும் சிறப்பு அந்தஸ்தை இணைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சீனக்குழுவினர கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் 1700 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளோம்: செந்தில் தொண்டமான் பெருமிதம்

இந்திய – சீனப் போர்

முன்னதாக இலங்கைத் தலைவர்களில், அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா 1962ஆம் ஆண்டு இந்திய – சீனப் போரின் போது இவ்வாறானதொரு பாத்திரத்தை வகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்காக 1962 டிசம்பரில் கொழும்பில் அணிசேரா நாடுகளின் மாநாட்டிற்கு அவர் முன்முயற்சி எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கணித ஒலிம்பியாட் விநாடி வினாப் போட்டி: சர்வதேச மட்ட ரீதியில் 8 மாணவர்கள் தெரிவு

கொழும்பு யாசகர்களால் சர்வதேச மாநாட்டை இழக்கும் அபாயத்தில் இலங்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version