கம்பஹா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துணை மருத்துவ சேவை ஊழியர்கள் கையொப்பமிடுவதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை கம்பஹா மருத்துவமனையின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.
போராட்டம்
அதன் காரணமாக இன்றைய தினம் துணை மருத்துவ சேவை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாகவே கம்பஹா மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமைய சீராக்கும் வகையில் கம்பஹா மருத்துவமனையின் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிய வருகின்றது.
