Home முக்கியச் செய்திகள் தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேசபந்துவின் முன்பிணை கோரிக்கை – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

குறித்த மனு இன்று (20.08.2025) கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

முன்பிணை கோரிக்கை

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தாம் கைதுசெய்யப்படுவதை, தவிர்க்கும் வகையில் முன்பிணை வழங்குமாறு அவர் கோரியிருந்தார்.

சட்டத்தினை மதிக்கும் ஒருவரின் முன்பிணை கோரிக்கையை பரிசீலிக்கும் இயலுமை நீதிமன்றத்துக்கு உள்ள போதிலும், நீதிமன்றத்தை தவிர்த்து வந்த ஒருவரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என நீதவான் தமது உத்தரவில் தெரிவித்தார்.

எனவே, நீதிமன்றத்தை தவிர்ப்பது சட்டத்தை மதிக்கும் ஒருவரின் செயற்பாடாக அமையாது எனக் கூறி, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர தேசபந்து தென்னகோனின் முன்பிணை விண்ணப்பத்தை நிராகரித்தார்.

NO COMMENTS

Exit mobile version