Home முக்கியச் செய்திகள் புடின் மீதான விமர்சித்தின் எதிரொலி: ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட உலகபோர் எச்சரிக்கை

புடின் மீதான விமர்சித்தின் எதிரொலி: ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட உலகபோர் எச்சரிக்கை

0

புடினை (Vladimir Putin) கண்டித்த ட்ரம்புக்கு (Donald Trump) முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மூன்றாம் உலகப் போர் எச்சரிக்ககையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “தீயுடன் விளையாடுகிறார்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கண்டித்து இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் முகமாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி மெத்வெதெவ் (Dmitry Medvedev) இதனை தெரிவித்துள்ளார்.

மோசமான விடயம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரே ஒரு மிக மோசமான விடயம் எனக்குத் தெரியும்.

அது மூன்றாவது உலகப் போர், ட்ரம்ப் அதை புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரோன் தாக்குதல்

ட்ரம்ப் சமீபத்தில், ரஷ்யாவின் தரைவழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 13 பேர் பலியாகியதை தொடர்ந்து, மாஸ்கோ மீது புதிய தடைகள் விதிப்பதை நிச்சயமாக பரிசீலிப்பதாக தெரிவித்திருந்தார்.

2022 பெப்ரவரியில் உக்ரைனில் போரைத் தொடங்கிய ரஷ்யா தற்போது நடப்பது உக்ரைன் தாக்குதல்களுக்கான பதிலடி என்றும், அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன் தடுக்க முயல்கிறது என்றும் குற்றஞ்சாட்டி இருந்தது.

இவ்வாறான சூழலில், மெத்வேதெவின் மோதலான பதில் உலக அரசியல் தருணங்களை மேலும் பதற்றமாக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version