Home இலங்கை அரசியல் யாழில் தமிழ் தேசிய கூட்டணியை சந்தித்த அனுரகுமார: வடக்கு அரசியலில் பரபரப்பு

யாழில் தமிழ் தேசிய கூட்டணியை சந்தித்த அனுரகுமார: வடக்கு அரசியலில் பரபரப்பு

0

அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளருக்கே ஜனநாயக் தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு நிலைப்பாடு இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (D. Siddarthan) தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக என்னையும் எங்களுடைய கட்சியினை நேற்று (11) சந்தித்த பொழுது எங்களுடைய நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

யாழ். கந்தரோடையில் அமைந்துள்ள அவரது வாசஸ்தலத்தில் கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடு: ரணில் விடுத்துள்ள உத்தரவு

அரசியலில் பெரும் பரபரப்பு

அதிகார பரவலாக்கம் சம்பந்நமாக எதுவும் கூறாத நிலைமை உள்ளது. கடந்த வடகிழக்கு பிரிப்பு சம்மந்தமான அதிருப்தியை கூறியிருந்தேன்.

அதேபோல நியாயமான அதிகாரபரவலாக்கல் சம்மந்தமான ஒரு பிரேரணயை முன்வைப்பாராக இருந்தால் மக்கள் நிச்சயமாக பரிசிலீப்பார்கள் . காரணம் புதிய மாற்றத்திற்கான கட்சியாக பார்க்கின்ற நிலை உள்ளது.

அத்துடன் எங்களுடைய கட்சியினை பொறுத்த வரையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக ஐந்து கட்சிகள்சார்பாகவும் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தபடுகின்ற பொழுது அதனை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டினை எடுத்துள்ளோம்.

ஆகவே அதிபர் தேர்தல் என வருகின்ற பொழுது நாம் தமிழ் பொதுவேட்பாளருடனே நிற்போம் என தெளிவாக எடுத்து கூறியுள்ளோம் என தெரிவித்தார்.

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய தெருவோர உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான யாழ்ப்பாண இளைஞன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version