Home இலங்கை அரசியல் ரணிலை சந்தித்த சீன தூதுவர் – தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

ரணிலை சந்தித்த சீன தூதுவர் – தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சீனத் தூதரின் வேண்டுகோளின் பேரில் நேற்று கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் உத்தியோகபூர்வ இராஜதந்திர சந்திப்பு இதுவாகும்.

பிணையில் விடுதலை

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.

அத்துடன், சீனத் தூதுவர் எதிர்காலத்தில் மற்றொரு உயர் மட்ட முன்னாள் அரசியல்வாதியைச் சந்தித்து கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,  

முன்னாள் ஜனாதிபதிகளுடனான சீனத்தூதுவரின் சந்திப்பானது உள்நாட்டு அரசியலில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

NO COMMENTS

Exit mobile version