Home இலங்கை அரசியல் இலங்கையின் அரசியல் நகர்வில் முக்கிய நால்வரின் சந்திப்பு

இலங்கையின் அரசியல் நகர்வில் முக்கிய நால்வரின் சந்திப்பு

0

Courtesy: Sivaa Mayuri

கடந்த புதன்கிழமை நாட்டின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நால்வர் கலந்து கொண்ட காலை உணவு சந்திப்பு குறித்து தொடர்ந்தும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

தற்போது  ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமாக மாறியுள்ள இடத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச, பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் அதிகாரி சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஜனாதிபதித் தேர்தல்

சந்திப்பின் ஆரம்பத்திலேயே “நீங்கள் ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கிறீர்களா?” என்று ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் மகிந்த ராஜபக்ச கேட்டார். “ஆம்,” உடனடி பதில் வந்தது. அத்துடன் மீண்டுமொரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் ஆனால் அது என்ன என்பதை தீர்மானிக்கவில்லை  என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது எந்த இரண்டாவது தேசியத் தேர்தலை மனதில் கொண்டுள்ளீர்கள் என்று மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் ஏன் கேட்கவில்லை?

நாடாளுமன்றத் தேர்தலுக்கே வாய்ப்பு உள்ளது என்பது அவருக்கு நெருக்கமான ஆதாரத்தின்படி தெரிந்திருந்தமையால், மகிந்த அதை பற்றி கேட்கவில்லை.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகராகவும் இருக்கும் சாகல ரத்நாயக்க உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், விவாதம் துரிதமாக நடத்தப்பட்டு,சந்திப்பு சீக்கிரமாகவே முடிவுக்கு வந்தது.

NO COMMENTS

Exit mobile version