Home இலங்கை சமூகம் றஜீவன் எம்.பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிடையில் விசேட சந்திப்பு..!

றஜீவன் எம்.பிக்கும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலருக்குமிடையில் விசேட சந்திப்பு..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் தலைமையிலான குழுவினருக்கும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று(9) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

நடவடிக்கைகள்

இதன்போது, புயலிற்கு பிந்திய
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்
அனர்த்த நிவாரண நடவடிக்கைகள், மக்களின் பாதுகாப்பு, அவசர தேவைகள், நிவாரணப்
பொருட்கள் விநியோகம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும்
ஆராயப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரும்
பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஸாம், வடமராட்சி கிழக்கு இணைப்பாளர் உதயபாஸ்கரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பரிதா மற்றும் தேசிய
மக்கள் சக்தியின் சமூக செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version