மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட பின்னர் இன்று(11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல்
மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி தியாகங்களை செய்யத்தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
2020 பெப்ரவரியில் பதிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி, இரண்டு பொதுத் தேர்தல்கள், ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியில் தற்போது 1773 உறுப்பினர்கள் உள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
