Home இலங்கை அரசியல் சஜித் தரப்பில் இருந்து விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

சஜித் தரப்பில் இருந்து விலகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி 

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், “அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் செய்து மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

தற்போது வரையில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு பொதுத் தேர்தல்கள், ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஒரு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version