Home இலங்கை அரசியல் 100 வீத வருகையை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

100 வீத வருகையை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

0

2025 பெப்ரவரி 17 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற அனைத்து 27 வரவு செலவுத் திட்ட
அமர்வுகளிலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே 100வீத வருகையைப் பதிவு
செய்துள்ளனர்.

அவர்களில், பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மட்டுமே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

மீதமுள்ள 7 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டி.வி. சானக, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர, கயந்த கருணாதிலக, ஹேஷா விதானகே,
கே. சுஜித் சஞ்சய பெரேரா, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் 100 வீத வருகையை
பதிவு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version