Home இலங்கை அரசியல் 10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்

10ஆவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்

0

Courtesy: Sivaa Mayuri

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வுக்கான குழுவில் பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் அசோக ரன்வல நேற்று அறிவித்துள்ளார். 

இதன்படி, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 143இன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற அவை

இதன்படி, லக்ச்மன் நிபுன ஆராச்சி, இம்ரான் மஹ்ரூப், ரோகினி குமாரி விஜேரத்ன, சானகியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன சேன நாணயக்கார, சானக மதுகொட, சஞ்சீவ ரணசிங்க, அரவிந்த செனரத்
மற்றும் கிட்ணன் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களே நாடாளுமன்றில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித்தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற அவைக்கு தலைமை தாங்குவார்கள்.  

NO COMMENTS

Exit mobile version