Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடரும் உறுப்பினர் இடைநிறுத்தங்கள்

ஐக்கிய மக்கள் சக்தியில் தொடரும் உறுப்பினர் இடைநிறுத்தங்கள்

0

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து கந்தகெட்டிய பிரதேச சபைக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட நவரட்ண முதியான்செலாகே விஜேபாலவின் என்ற உறுப்பினர்,
அந்தக்கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

உறுப்பினர் இடைநிறுத்தங்கள்

அதேநேரம், கட்சியில் இருந்து அதிக வாக்குகளைப் பெற்று கொலன்னாவ நகர சபைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட நாரஹேன்பிடகே சுசில் குமார கொஸ்தா என்ற உறுப்பினரும்,
கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன்
வெளியிட்ட அறிக்கையில், இடைநிறுத்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, பல உள்ளூராட்சி சபைகளில் இருந்தும் இதுபோன்று சஜித் தரப்பின்
உறுப்பினர்கள் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version