Home இலங்கை சமூகம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம்

0

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களுடைய 19ஆம் ஆண்டு
நினைவுதினமானது முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நினைவு தினமானது இன்று(30.04.2024) முல்லைத்தீவு
ஊடகவியலாளர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

உணர்வு பூர்வமாக அஞ்சலி

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களுடைய
உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக
அஞ்சலி செலுத்தப்பட்டது.

தர்மரத்தினம் சிவராம் என்ற இயற்பெயர்கொண்ட சிரேஷ்ட
ஊடகவியலாளர் சிவராம், தராகி என்ற புனைபெயரில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள
பல பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

கடந்த 2005ஆம்ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வைத்து
இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் நாடாளுமன்றக் கட்டடத்
தொகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்-சண்முகம் தவசீலன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க – இந்திய கடற்படைக் கப்பல்களுக்கு இலங்கைக்குள் ஏற்பட்ட பெரும் ஆபத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version