Home இலங்கை அரசியல் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி

0

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும்
ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் என வவுனியா
மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (30.04.2024) ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

தமிழர் உரிமைகள் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாளைய தினம் தொழிலாளர் தினமாகும். தொழிலில் ஈடுபட்டு எங்களது உறவுகளை கடத்திக்
காணாமல் ஆக்கப்பட்டதனால் நாங்கள் அவர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறோம்.

தற்போது உழைப்பாளி என்ற வர்க்கத்தில் நாங்கள் இல்லாமல் கையேந்தும்
வர்க்கத்தில் உள்ளோம். எனவே எங்களது உறவுகளை மீண்டும் எமக்கு திருப்பித் தர
வேண்டும் என்பதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறோம்.

மேலும் எமக்கான நீதியினை பெற்றுத்தராமல் சர்வதேசமும் தொடர்ச்சியாக எங்களை
ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது. என்றாலும் கூட எங்களது உறவுகளுக்கான
சர்வதேச நீதியை பெற்று தர வேண்டும்.

அத்தோடு எமது உரிமைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது.

தற்போது
ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும்
ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும். அதுவே
சிறந்தது என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: 14 பாகிஸ்தானியர்கள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version