Home இலங்கை சமூகம் யாழ். போதனாவில் இந்திய இராணுவத்தால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

யாழ். போதனாவில் இந்திய இராணுவத்தால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, நேற்றையதினம் (21.10.2024) யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது..

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ். போதனா
வைத்தியசாலைக்குள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொண்டனர்.

கடமையில் இருந்தோர்

அந்தத் தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று
மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ
சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை
செய்யப்பட்டனர். 

NO COMMENTS

Exit mobile version