யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30.05.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் (Chunnakam) காவல்துறையினரில் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல் நாடத்திய போது 15 கிராம் ஹெரோயின் மற்றும்
2 கிராமம் ஐஸ் போதை பொருளை மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
குறித்த நபர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு
வந்தவர் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலும், காவல்துறையினர் சந்தேக நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
https://www.youtube.com/embed/pB2KD_veFZs
