Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் குடும்பஸ்தரை மோதித் தள்ளிய சுகாதார அமைச்சின் வாகனம்

தமிழர் பகுதியில் குடும்பஸ்தரை மோதித் தள்ளிய சுகாதார அமைச்சின் வாகனம்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) இடம்பெற்ற விபத்தில் 55 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த விபத்து A9 வீதி கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த சுகாதார அமைச்சுக்கு சொந்தமான கப் ரக வாகனம் வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 55 வயதான திருகோணமலையைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version