Home இலங்கை அரசியல் மேர்வின் சில்வா ஏப்ரல் 03ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

மேர்வின் சில்வா ஏப்ரல் 03ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

0

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஏப்ரல் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர வேண்டும் என மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள அரசு நிலம் ஒன்றை பொய்யான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) அவரை பத்தரமுல்லை, பலாவத்த பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்தது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மட்டுமல்லாது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (மார்ச் 24) மஹர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களை ஏப்ரல் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version