Home சினிமா புதிய தொடருக்கு தயாரான மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன்… முழு விவரம்

புதிய தொடருக்கு தயாரான மெட்டி ஒலி சீரியல் புகழ் திருமுருகன்… முழு விவரம்

0

திருமுருகன்

கடந்த 2002ம் ஆண்டு முதவ் 2005 வரை சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் மெட்டி ஒலி.

இந்த தொடரை இயக்கி கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் திருமுருகன். இந்த தொடரை இயக்கியதன் மூலம் சின்னத்திரையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க அப்படியே வெள்ளித்திரை பக்கமும் சென்றார்.

எம்-மகன் திரைப்படத்தை இயக்கி தமிழக அரசின் விருதைப் பெற்றார். பின் பரத்துடன் இணைந்து முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தையும் இயக்கினார்.

பின் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்தவர் நாதஸ்வரம், கல்யாண வீடு, தேனிலவு, குலதெய்வம் தொடர்களை இயக்கி வெற்றிக் கண்டார்.

புதிய தொடர்

இயக்குனர் திருமுருகன் புதிய தொடர் ஒன்றை இயக்கியுள்ளதாக அவரின் யூடியூப் சேனலில் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இவர் இயக்கும் புதிய தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version