ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், லதா என்பவரை காதலித்து 1981ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளனர். இவை யாவும் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.
ஆனால், ரஜினிகாந்தின் திருமணம் நடக்க புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் காரணமாக இருந்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதை ரஜினிகாந்த் மேடை ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
எம்ஜிஆர்
“என்னை பார்த்து திருமணம் எப்போது செய்துகொள்ள போற என எம்ஜிஆர் கேட்டார். இன்னும் பொண்ணு பார்க்கவில்லை என நான் கூறினேன். முதலில் நல்ல குடும்ப பெண்ணா பார்த்து திருமணம் பண்ணிக்கோங்க, முதல என்கிட்டே தான் சொல்லணும், நான் திருமணத்திற்கு வருவேன் என அவர் கூறினார். அதற்கு பின் என் மனைவி லதாவை நான் சந்தித்தேன். லதாவை சந்தித்ததை என் உடன் பிறந்த அண்ணாவுக்கு கூட சொல்லவில்லை, நான் முதலில் சொன்னது எம்ஜிஆர் இடம்தான். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்”.
“அதன்பின், லதா வீட்டில் எனக்கு பொண்ணு தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. சினிமாகாரன் என்கிற காரணத்தினால் பொண்ணு தரவில்லை. ஒரு ஐந்து ஆறு மாதம் கழித்து எம்ஜிஆர் என்னிடம் கேட்டார், திருமணம் என்ன ஆனது என்று. நான் இந்த காரணத்தை கூறினேன். அவரிடம் பேசிய இரண்டாவது நாளே லதா வீட்டில் எனக்கு பொண்ணு தர ஒத்துக்கொண்டார்கள்”.
ஹோட்டல் அறையில் இறந்து கிடந்த நடிகர்.. அதிர்ச்சியில் திரையுலகம்
“நான் கேட்டேன் எப்படி என்று, எம்ஜிஆர் அவர்கள்தான் எனக்காக லதா வீட்டில் பேசியுள்ளார். நல்ல பையன், உங்க பொண்ண நல்லா பாத்துப்பான் என அவர் கூறியிருக்கிறார். எனக்கே திருமணம் நடக்கவே எம்ஜிஆர்தான் காரணம். நான் இன்னிக்கி என் வாழ்க்கையில் சொந்தோஷமாக இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு அவர்தான் காரணம்” என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
